பன்முகத்திறமை, பக்காவான நடிப்பு… நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நினைவு நாள் இன்று..!!
நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்ட எஸ்.எஸ்.சந்திரன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் ரஜினி, கமல் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருந்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறார்.எத்தனையோ நடிகர்கள் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் தமிழ்நாட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்ட எஸ். எஸ். சந்திரனை ரசிகர்கள் இப்ப வரைக்கும் மறக்க முடியாமல் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தான் இறந்தாலும் அவர்களுடைய புகழ் குறையாமல் இருந்து வருகிறது. அதில் ஒருவராக எஸ். எஸ். சந்திரன் இருந்து வருகிறார்.
வில்லன் நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்த
‘சகாதேவன் மகாதேவன்’, ‘தங்கமணி ரங்கமணி’, ‘பாட்டி சொல்லை தட்டாதே’, போன்ற திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்றார். பல திரைப்படங்களையும் இவர் தயாரித்து தன்னுடைய தயாரிப்பாளர் முகத்தையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.
ரஜினிகாந்த்தின் ‘மாப்பிள்ளை’, ‘உழைப்பாளி’ போன்ற திரைப்படங்களில் தனக்கே உரிய பாணியில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதனைத் தொடர்ந்து ‘விஷ்ணு’, ‘ஒன்ஸ்மோர்’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘மனம் விரும்புதே’ போன்ற திரைப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
நடிகராக மக்களை மகிழ்வித்த கலைஞன் எஸ்.எஸ்.சந்திரன் அதிமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார். நடிப்பு திறமையை தாண்டியும் இவர் ஒரு அரசியல் பேச்சாளராகவும் விளங்கி வந்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். 2010-ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அக்டோபர் 09-ம் நாள் அவர் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருந்தாலும் அவருடைய புகழ் இன்னமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நாளில் அவரைப் பற்றியும் அவர் நடித்த திரைப்படங்கள் பற்றியும் நினைவு கூறுவோம்..
அவரது திரைப்படங்களை பார்க்கும் போது ரசிகர்கள் பலர் இன்னும் அவரை நினைத்து கொண்டு இருக்கிறார்கள்..