கிசு கிசுதமிழ் சினிமா

5 மணிக்கு மேல் நோ சூட்டிங்… ஒன்லி ரெஸ்ட் தான்… தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்கள்..!!

தமிழ்நாட்டின் மாஸ்  நடிகர்கள் சாயங்காலம் 6 மணி ஆகிவிட்டால் போதும் டக்குனு வீட்டிற்கு போய் விடுவார்கள்….

சினிமாவைப் பொறுத்தவரை நேரம் காலம் பார்க்காமல் எந்நேரமும் பரபரப்பாக சூட்டிங்கில் வேலை பார்க்கும் ஆர்டிஸ்ட்கள் தான் அதிகமானவர். ஆனால் இதற்கு விதிவிலக்காக சாயங்காலம் ஆறு மணி ஆயிட்டினா வீட்டிற்கு போகும்  நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த நடிகர்கள் யார் என்று பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகர் மற்றும் வில்லன் என்று 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் பிரகாஷ் ராஜ். இவர் எந்த அளவுக்கு சினிமாவில் இவருடைய பங்களிப்பை அர்ப்பணிக்கிறாரோ, அதே அளவிற்கு வீட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று 5 மணிக்கு மேல் சூட்டிங்க்கு நோ சொல்லிவிடுவாராம்.

அடுத்தபடியாக காதல் மற்றும் ஆக்சன் என நடிப்பை வெளுத்து வாங்கிய நடிகர் பிரபு. அப்படிப்பட்ட இவர் எந்த காரணத்தை கொண்டும் மாலை ஆறு மணிக்கு மேல் எனக்கு சூட்டிங் வைக்க கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக இயக்குனரிடம் கூறிய பின்பு தான் நடிக்கவே வருவாராம். அந்த அளவிற்கு சினிமா மற்றும் குடும்பத்திற்கு நேரத்தை ஒதுக்கி கொண்டு வருகிறார்.

அடுத்ததாக இவர்கள் தான் குடும்பம் குட்டி என்று வீட்டிற்கு சீக்கிரம் போகிறார்கள் என்றால் கன்றுக்குட்டியாக இருக்கும் இளம் வயது இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த லிஸ்டில் இருக்கிறார். இவரைப் பொறுத்தவரை எந்த அளவிற்கு ஹிட் பாடல்கள் கொடுக்கிறாரோ, அதே மாதிரி உடம்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அக்கறையை அதிகமாக வைத்திருக்கிறார். அதனால் தான் சீக்கிரமே வீட்டிற்கு சென்று ஒன்பது மணி ஆகிட்டாலே தூங்க போய்விடுவாராம்.

இன்னும் சொல்லப்போனால் இரவு நேரத்தில் எந்தவித பார்ட்டியும் அட்டென்ட் பண்ண கூட மாட்டார். அடுத்ததாக தன்னுடைய 72 வயதிலும் ஹீரோவாக நடிப்பதற்கு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதனால் இவருக்கான கால நேரத்தை பட்டியலிட்டு அதற்கேற்ற மாதிரி நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் ஏழு மணிக்கு ஷூட்டிங் வருவது, சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டிற்கு திரும்பிப் போக வேண்டும்.இதனாலேயே இவரை வைத்து படத்தை முடிப்பதற்கு ரொம்பவே நெல்சன் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

அடுத்ததாக விஜய், சாயங்காலம் ஆறு மணி ஆகிட்டா டக்குனு ஷூட்டிங்கில் இருந்து வெளியே வந்து விடுவாராம். அதே நேரத்தில் ஏழு மணிக்கு இரவு சாப்பாடு, ஒன்பது மணிக்கு தூக்கம். காலை 5 மணிக்கு வழக்கம்போல் எழுந்து சூட்டிங் என்று இவருக்கு தகுந்தார் போல் கால நேரத்தை பட்டியலிட்டு இருக்கிறார்..இந்த டாப் 5 நடிகர்கள் என்னதான் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் டானு சாயந்தரம் 5 மணிக்கு எஸ்கேப் ஆகிவிடுவார்களாம்…

Related Articles

Back to top button