பொண்ணா… கௌரவமா..? குழம்பிய ரஜினி..? சி.எம்.க்கு போன் போட சொன்ன குருநாதர்..!!
சென்னை: ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் ஏற்படுத்திய தாக்கம் தற்போதைய தலைமுறையிடமும் இருக்கிறது.
அவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா இப்போது தனுஷிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாக கூறப்படுகிறது. தனுஷும் விவாகரத்து கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க பத்திரிகையாளர் அந்தணன் கூறியிருக்கும் விஷயம் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நாற்காலியை பல வருடங்களாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். இடையில் அவர் தோல்விகளை சந்தித்தார், சறுக்கல்களை சந்தித்தார். இருந்தாலும் சந்திரமுகி பட விழாவில் அவர் சொன்னதுபோல், விழுந்தால் குதிரை போல் சட்டென்று எழுந்துவிடும் வழக்கம் உடையவர் அவர். அப்படித்தான் அவருக்கு அமைந்தது ஜெயிலர் படம். அந்தப் படத்துக்கு முன்னர் வெளியான அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் ரஜினியின் சகாப்தம் முடிந்துவிட்டதாக பலரும் எழுதினார்கள், பேசினார்கள். ஆனால் ஜெயிலர் அதனை பொய்யாக்கியது. தற்போது அவர் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அக்டோபர் மாதம் படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் பெயர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.
தன்னுடைய கரியரில் எத்தனையோ சிக்கல்களை சந்தித்த ரஜினிகாந்த்துக்கு குடும்பத்திலும் சிக்கல் எழத்தான் செய்தது. இளைய மகள் சௌந்தர்யா முதல் கணவரை பிரிந்தார். அந்த சம்பவம் ரஜினிக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்தாலும் இரண்டாவது திருமணம் செய்து வைத்து அந்த சங்கடத்தை தீர்த்துக்கொண்டார். ஆனால் பெரும் சங்கடமாக மாறியிருப்பது மூத்த மகள் ஐஸ்வர்யா விவகாரம்தான்.
கிட்டத்தட்ட 20 வருடங்கள் தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ்ந்தார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்களும் டீன் ஏஜில் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்துக்கு விண்ணப்பத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாகவே அவர்களை சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்ததாகவும், ரஜினி தலையிட்டும் அவர்களை சேர்த்து வைக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரொம்பவே அப்செட் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
தனக்கும் வயதாகிவிட்டது; பேர பிள்ளைகளும் வளர்ந்துவருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க தற்போது இந்த விவாகரத்து தேவைதானா என்பதுதான் ரஜினியின் எண்ணமாம். ஆனால் தனுஷோ ஐஸ்வர்யாவோ பிடி கொடுக்க மறுக்கிறார்களாம். இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் ரஜினி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், “ரஜினிகாந்த்துக்கு எப்போதெல்லாம் குழப்பமான மனநிலை வருகிறதோ அப்போதெல்லாம் பாலசந்தரிடம்தான் ஆலோசனை கேட்பார். அது இரவு 12 மணி ஆனாலும் சரி கேபி வீட்டுக்கு சென்றுவிடுவார்.
அப்படித்தான் ஒருமுரை ஐஸ்வர்யாவால் பிரச்னை ஒன்று ரஜினிக்கு வந்தது. அந்த சமயத்தில் கே.பாலசந்தரிடம் நடந்ததை சொன்னார். அதற்கு பாலசந்தரோ நேராக சிஎம்முக்கு ஃபோன் பண்ணு (அப்போது ஜெயலலிதா முதலமைச்சர்) என்று சொன்னார். அதற்கு ரஜினியோ நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரிடம் பேசுவேன் என்றிருக்கிறார். ஏனெனில் ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் இடையே ஒரு மோதல் நிலவியது தமிழ்நாட்டுக்கே தெரியும். ரஜினி அப்படி சொன்னதை அடுத்து பாலசந்தரோ, உனக்கு பொண்ணு முக்கியமா இல்லை கௌரவம் முக்கியமா என்று கேட்டார். அதனையடுத்து ஜெயலலிதாவிடம் நடந்ததை ரஜினிகாந்த் சொல்ல; அந்தப் பிரச்னையை ஜெ தீர்த்து வைத்தார்”” என்றார்.
”ஐஸ்வர்யா விவகாரத்தில் ரஜினிகாந்த் தனுஷிடம் கெஞ்சவெல்லாம் இல்லை. அதேபோல் ரஜினியை தனுஷ் பழி வாங்கவும் இல்லை. ஏனெனில் ரஜினி மீது தனுஷ் உச்சக்கட்ட மரியாதை வைத்திருக்கிறார். ரஜினியை அப்பா என்றும், லதாவை அம்மா என்றும்தான் தனுஷ் அழைப்பார். அந்த மாதிரியான இடத்தில்தான் அவர்களை தனுஷ் வைத்திருக்கிறார்” என்று கூறினார்..