சினிமாவுக்கு வர குடும்பத்தையே பிளாக்மெயில் செய்த பிரபல நடிகர்… கார்த்தி நடிகரான கதை..!!
நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்தி இன்று ஒரு மிகப்பெரிய நடிகனாக மாறி இருக்கிறார். கார்த்தி சினிமாவுக்கு வந்தது ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம்..
அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர்.
முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ‘ஒரு புதுமுக நடிகர் இப்படி நடிக்க முடியுமா?’ என ரஜினி போன்ற பிரபலங்களே வியந்து போனார்கள்.
அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் பையா படத்தில் நடித்து தனக்கு சிட்டி கதைகளும் செட் ஆகும் என காண்பித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட். சிவா இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம்தான் சிறுத்தை. இரண்டு கதாபாத்திரத்திலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார் கார்த்தி. அதிலும், போலீஸ் அதிகாரியாக கலக்கி இருந்தார்.
அதாவது, தனது அண்ணன் சிங்கும் சூர்யாவுக்கே டஃப் கொடுத்தார் சிறுத்தை கார்த்தி. இந்த படம் அதிரி புதிரி ஹிட் அடிக்க ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. சினிமாவுக்கு வருவதற்கு முன் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவியாளராக கார்த்தி பணிபுரிந்திருக்கிறார்.
தனது குருநாதர் இயக்கத்தில் காற்று வெளியிடை மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் வெளிநாட்டில் இன்ஜினியரிங் படித்தவர்தான் கார்த்தி. சினிமா மீது ஆர்வம்.
ஆனால், சிவக்குமார் அதற்கு அனுமதி தரவில்லை. இந்தியா வரும்படி கார்த்தியிடம் அவரின் அம்மா கெஞ்சுவாராம். அப்போதெல்லாம். ‘நான் இந்தியா வரேன். ஆனால், என்னை சினிமாவில் நடிக்க அனுமதிக்கணும். அப்பாகிட்ட கேட்டு சொல்லு’ என பிளாக்மெயில் செல்வாராம் கார்த்தி.
அப்படி சென்னை வந்ததும் அப்பாவின் அனுமதியை பெற்றார். முதலில் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மணிரத்னத்திடம் உதவியாளராக சேர்ந்து, அவரின் அண்ணன் சூர்யா நடித்த ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தார். ஒருபக்கம், சினிமாவில் நம்மால் சாதிக்க முடியுமா?’ என்கிற பயமும் கார்த்திக்கு இருந்துள்ளது. ஆனாலும் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே அழகான நடிப்பை கொடுத்து தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்துவிட்டார் கார்த்தி..தற்போது கார்த்திக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது..