‘காவாலா’ பாடலுக்கு தமன்னாவையே மிஞ்சும் அளவுக்கு அசத்தலான ஆட்டம் போட்ட குட்டி யானை… இணையத்தில் செம வைரலாகி வருகிறது..!!
குட்டி யானைகளின் சேட்டைகள் அடங்கிய வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி ட்ரெண்டாகும். தமிழக கோயிலில் உள்ள பாப் கட் செங்கமலம் என்ற யானை அதன் ஹேர் ஸ்டைலுக்காகவே ட்ரெண்டானது.
உலகம் முழுவதும் யானைகளில் சேட்டைகள் அடங்கிய வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். சமீபத்தில் கூட வால்பாறை பகுதியில் தாயை பிரிந்து கூட்டத்தைவிட்டு வழித்தவறி வந்த குட்டி யானை ஒன்று மீண்டும் தாயுடன் இணைந்த வீடியோ. தாயின் அரவணைப்பில் அந்த குட்டி யானை உறங்கிய வீடியோக்களை வனத்துறையினர் வெளியிட்டனர் அந்த வீடியோக்கள் வைரலானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காவாலா பாட்டுக்கு ஸ்டெப் போட்டு அசத்திய யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது. அந்த வீடியோகள் விநாயகர் சிலைக்கு அருகில் இளம்பெண்கள் வரிசைக்கட்டி நிற்க குட்டி யானை ஒன்று காவாலா பாட்டுக்கு ஆட்டம் போடுகிறது.
அந்த வீடியோ நன்கு உற்று பார்த்தால் தான் வீடியோவில் இருக்கும் ட்விஸ்ட் புரிகிறது. உண்மையில் அது ஒரு நிஜ யானை இல்லை. யானை வேடமிட்ட நபர் தான் அப்படி ஸ்டெப் போட்டி அதிரவைத்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் வைரலாகிறது.
இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. எக்ஸ் தளத்தில் ஒரு யூசர் உங்க காஸ்ட்யூம் அழகாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளது. இன்னும் சிலரோ ஆச்சர்யத்துடன் அடக்கடவுளே என கமெண்ட் செய்துள்ளனர்.