தமிழ் சினிமா

ஆளே அடையாளம் தெரியல… வெளிநாடு பறக்கும் சீக்ரெட் இது தானாம்… ஜாலியா ஊர் சுற்றும் ரஜினி.. இது புது ட்ரிக்கா இருக்கே..!!

ரஜினி ஒன்றும் பிறக்கும்போதே பணக்காரர் இல்லை. பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்தார். கிடைக்கும் சம்பளத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக செலவு செய்து வந்தவர். ஒரு நாடகத்தில் அவர் நடித்ததை பார்த்த அவரின் நண்பர் ‘உனக்குள் ஒரு ஸ்டைல் இருக்கு. நீ சினிமாவுக்கு போய் முயற்சி செய்’ என சொல்ல அப்படி சினிமாவுக்கு வந்தவர்தான் ரஜினி.

பொதுவாக நம் நாட்டில் இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு இருக்கும் பெரிய ஆசையே சாதாரண மக்கள் மாதிரி நாமளும் வலம் வர வேண்டும் என்பது தான்.

அப்படி அமெரிக்க சென்ற போது ரஜினிக்கு வந்த ஒரு திடீர் ஆசையில் ஒரு விஷயத்தினை செய்தாராம்.

சாதாரண ஒரு கண்டெக்டராக இருந்து நடிகராக ஆசைப்பட்டு திரைப்பட கல்லூரியில் இணைந்து படித்தவர் ரஜினிகாந்த். அங்கிருந்தும் கூட தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு இன்று கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அடையாளத்துடன் வலம் வருகிறார். சினிமா பின்னணியே இல்லாதவர்.

நடுத்திர குடும்பத்தில் இருந்து வந்த ரஜினிக்கு அதன்பின்னர் தன் சுதந்திரமே பறிப்போனதாகவே கருதுகிறார். இதனால் தான் அவர் ஓய்வெடுக்க விரும்பும் சில மாதங்களை வெளிநாட்டுக்கு பறந்துவிடுவாராம். ஒரு படம் முடிந்து அடுத்த படம் துவங்குவதற்கான ஓய்வை அப்படி பயன்படுத்திக் கொள்கிறார்.

அது அங்கு இருக்கும் உயர்தர விஷயங்களுக்காக இல்லை. சாதாரண வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு தானாம். வெளிநாடுகளில் தன்னை அடையாளம் காண முடியாத இடங்களில் பெரும்பாலும் நடைப்பயணமாக செல்வாராம். இல்லை அங்கிருக்கும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவாராம். ஸ்டாரை மறந்து சாதாரண மனிதனாகிவிடுவாராம்.

இப்படி ஒரு முறை அமெரிக்கா சென்றபோது ரஜினி பாரதிராஜாவுக்கு கால் செய்து நான் எப்படி இருக்கேன் தெரியுமா? மொட்டை போட்டு, அரை நிக்கர் மேலே ஒரு பனியன், அவ்வளவுதான். இப்போ யாருக்கும் என்னை அடையாளம் தெரியலை. ஜாலியா ஊரை சுத்துக்கிட்டு இருக்கேன் என்றாராம். இதனாலே வெளிநாட்டில் ரஜினி செல்வது வாடிக்கையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.திரையுலகில் ரஜினியை போன்ற நடிகர்கள் மிகவும் அரிது என்றுதான் சொல்ல வேண்டும்…

Related Articles

Back to top button