தமிழ் சினிமா

கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை.!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயத் தொழிலாளி காசம்மாள் (வயது 71). இவர் இயக்குநர் மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாக நடித்து உள்ளார். இந்த படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது வென்ற நல்லாண்டிக்கு தங்கையாக நடித்த காசம்மாள் (71) மகனால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

காசம்மாள் மற்றும் அவரது கணவர் பாலசாமிக்கு நமக்கொடி உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நாமக்கொடி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மது வாங்குவதற்காக அதிகாலை 3 மணிக்கு காசம்மாளிடம் மூத்த மகனான நமக்கோடி பணம் கேட்டு இருக்கிறார்.

அதற்கு பணம் இல்லை என்பது போல காசம்மாள் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கொண்டு இருந்த நிலையில், ஒரு கட்டத்தின் மேல் நமக்கோடி தனது தாயைக் பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து அடித்து கொலை செய்துள்ளார்.

கட்டையை எடுத்து அடித்து விட்டு நமக்கோடி அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த காசம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த துயரமான சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நமக்கொடியை கைது செய்தனர்..

Related Articles

  • Be the first to comment

Back to top button