உலக நாயகனை சந்தித்த நம்ம ஹீரோ… ஓ!! இவருடன் தான் அடுத்த படமா..?
உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகிவரும் எஸ்கே21 படத்தில் சிவகார்த்திகேயன்.ஹீரோவாக நடித்து வருகிறார்….
இந்தப் படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், சில தினங்களில் சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில உருவாகிவரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி கமிட்டாகியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், யோகிபாபு, மிஷ்கின், சரிதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 80 கோடிகளை தாண்டி வசூல் சாதனை புரிந்துள்ளது. அவரது முந்தைய படங்களான டாக்டர், டான் படங்களை போலவே இந்தப் படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை மாவீரன் படம் எட்டவில்லை.
இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே21 படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது. படத்தின் முதல்கட்ட சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து 75 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதையொட்டி காஷ்மீரில் போர்க்கள காட்சிகளும் படமாக்கப்பட்டது. அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் படத்தின் நாயகியான சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு வரும் தீபாவளியையொட்டி டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடைபெறவுள்ள நிலையில், மறுபுறம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் சந்தித்துள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின்போது, சிவகார்த்திகேயனுக்கு உற்சாக வரவேற்பை கொடுத்த கமல்ஹாசன், நம்ம ஹீரோ என்று புரொடக்ஷன் ஊழியர்களிடம் மகிழ்ச்சியாக அறிமுகம் செய்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை மற்றும் சில மாநிலங்களிலும் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படம் தமிழகத்தை சேர்ந்த மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயனின் காதலி மற்றும் மனைவியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இவர்களின் காம்பினேஷன் காட்சிகள் சென்னையில் நடக்கவுள்ளன. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இந்தப் படம் அடுத்த ஆண்டில் பொங்கல் கொண்டாட்டமாக ரிலீசாகும்.. இந்த புதிய கூட்டணி ஜொலிக்குமா