தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’… மிரள வைக்கும் ஏலியன்கள்..!!
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்…
கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.
கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படம் என்பதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருந்தது
இதற்கு முன்பு இயக்குனர் ரவிக்குமார் “இன்று நேற்று நாளை” என்ற படத்தை இயக்கியிருந்தார்.
நீண்ட காலமாக தாமதமாகி வரும் ‘அயலான்’ படம் முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சமீபத்தில் படக்குழு வெளியீட்டு தேதியை ஒத்திவைத்து, 2024 பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனிடையே இன்று இரவு 7.08 மணிக்கு டீசர் வெளியாகிறது என அறிவித்திருந்தது.
அதன்படி, ஒருவழியாக இப்படம் தற்பொழுது வெளியாகியுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. கண்ணை கவரும் ஒவ்வொரு காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது.
இந்நிலையில், வேற்றுக் கிரகவாசியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பு நிறுவனம் கேஜிஆர் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
ஏலியன் உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது, ‘அயலான்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் CGI வேலைக்காக அயராமல் உழைத்து வந்த படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக தான் மேலும் நீட்டிக்கப்பட்டது .இந்த தீபாவளிக்கு படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது..