ஹாலிவுட் மெகா ட்ரீம் ஜாம்பவான்கள் இணைந்து அசத்தும் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4 … லேட்டஸ்ட் அப்டேட்.!!
ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்து இயக்கிய அதிரடி ஆக்ஷன் படம், ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’. 2010-ம் ஆண்டு வெளியான இதில் ஜெட்லி, டால்ஃப் லண்ட்கிரன், ரேண்டி கோச்சர், டெர்ரி க்ரூஸ், ஸ்டீவ் ஆஸ்டின் உட்பட பலர் நடித்தனர்.இந்தப் படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின.
2012-ம் ஆண்டு இதன் 2-ம் பாகம் வெளியாகி வெற்றிபெற்றது. இதன் கதையை சில்வஸ்டர் ஸ்டாலோன் எழுத, சைமன் வெஸ்ட் இயக்கி இருந்தார். இந்தப் படமும் வசூலில் பட்டையை கிளப்பியது. இதன் 3 பாகம், 2014-ம் ஆண்டு பாட்ரிக் ஹ்யூக்ஸ் இயக்கத்தில் வெளியானது. இந்நிலையில் ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4’ படம், வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியான இதில் டோனி ஜா (Tony Ja), மேகன் போக்ஸ், இகோ யூவைஸ் உட்பட பலர் இணைந்திருக்கிறர்கள். அணு ஏவுகணைகளை லிபியாவின் இரசாயனக் கூடத்திலிருந்து கடத்திச் சென்று அரசியலில் தொடர்புடைய பணக்காரனிடம் விற்று பணம் சம்பாதிக்கத் திட்டமிடுகிறான் சுவார்டோ ரஹ்மத். இதனால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்படுகிறது. தி எக்ஸ்பென்டபிள் அணியினர் இதை எப்படி தடுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
முந்தைய படங்களைப் போலவே ஒரு அதிரடியான காட்சியாக இருக்கும் வகையின் ரசிகர்கள் உண்மையிலேயே எதிர்பார்க்கக்கூடிய ஒரு மாஸ் படமாக இருக்கும் . பல ஜாம்பவான்கள் நடித்து கலக்கி இருக்கிறார்கள்..