சிம்பு படமா நோ சொன்ன அனிருத்… அப்செட்டில் கமல்… கை கொடுக்கும் கேஜிஎஃப்..!!
பீப் சாங் சர்ச்சைக்கு பின் இணைந்து பணியாற்ற மறுத்த அனிருத் கடும் குழப்பத்தில் இருக்கும் கமல்..
சிம்புவை தன் தயாரிப்பில் நடிக்க கமிட் செய்தது தப்போ என்று கமல் நினைக்கும் அளவுக்கு அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இவர்களின் கூட்டணியில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் STR48( எஸ் டி ஆர் – 48 ) படத்தின் அறிவிப்பு வெளிவந்து மாத கணக்காகிவிட்டது.
ஆனால் படம் ஆரம்பிப்பதற்கான அறிகுறி தான் தென்படவே இல்லை. இதற்கிடையில் ஐசரி கணேஷ் உடன் இருந்த கருத்து வேறுபாடு, ரெட் கார்டு, கோர்ட், கேஸ் என்று சிம்புவின் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆனது. இருந்தாலும் பிரச்சனை எல்லாம் முடியட்டும் என்று கமல் காத்திருந்தார்.
தற்போது அனைத்தும் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்று அணுகி இருக்கின்றனர். ஆனால் அவரோ நீங்கள் 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் கூட சிம்பு இருக்கும் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம்.
இது என்ன புது குழப்பம் என்று பார்த்தால் எல்லாம் பழைய விவகாரம் தானாம். பல வருடங்களுக்கு முன்பு பீப் சாங் பிரச்சனையில் சிம்புவுடன் சேர்ந்து அனிருத்தின் பெயரும் சின்னாபின்னமானது. அதிலிருந்தே இவர்களுடைய நட்பும் உடைந்து போனது.
இந்த காரணத்தினால் தான் அனிருத் இப்போது கமல் படம் என்று தெரிந்தும் கூட இசையமைக்க மறுத்துவிட்டாராம். இப்படி நாலா பக்கமும் சிம்புவால் வரும் குடைச்சலால் ஆண்டவர் தான் பாவம் தலையை பிச்சுக்காத குறையாக இருக்கிறாராம். இருப்பினும் தற்போது அவர் கேஜிஎஃப் பிரபலத்தையே வளைத்து போட்டு விட்டார்.
அந்த வகையில் அப்படத்திற்கு இசையமைத்த ரவி பாசூரை தான் கமல் பல கோடி சம்பளம் கொடுத்து கமிட் செய்திருக்கிறார். இதுதான் இப்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஆக மொத்தம் அனிருத் மறுத்தாலும் கேஜிஎஃப் இசையமைப்பாளர் கை கொடுத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது.
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருப்பதாகவும், சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சிம்பு மற்றும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன..