ரஜினி கேரியரில் மறக்க முடியாத முரட்டுக்காளை படம்… எங்களுக்கு லாபம் தரவில்லை…உண்மையை போட்டு உடைத்த தயாரிப்பாளர்.!!
ரஜினியின் கரியரில் முக்கியமான திருப்புமுனை தந்த படம் 1980 டிசம்பர் 20-ல் வெளியான முரட்டுக் காளை திரைப்படம். பஞ்சு அருணாச்சலம் எழுதிய கதையை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். படம் வெளியாகி 43 ஆண்டுகள் நெருங்கிய நிலையில், அந்தப் படம் பற்றிய சுவாரஸ்யங்களைப் பார்க்கலாம்…
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1980-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முரட்டுக்காளை’.இந்த திரைப்படத்தில் ரதி அக்னிஹோத்ரி, ஜெய் சங்கர், சுருளி ராஜன், ஒய்ஜி மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், சுமலதா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். மு. குமரன், எம்.சரவணன், எம்.பாலசுப்ரமணியம் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்து இருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த “முரட்டுக்காளை” மக்களுக்கு மத்தியில் அந்த சமயமே பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
ரஜினியின் சினிமா கேரியரில் எத்தனையோ படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் மறக்க முடியாத பல படங்கள் இருக்கிறது. அந்த பட்டியலில் இந்த திரைப்படமும் இருக்கும் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரஜினி ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது. ஆனால், இந்த திரைப்படம் சில இடங்களில் வாங்கியவர்களுக்கு லாபத்தை கொடுக்கவில்லையாம்.
தயாரிப்பாளர் ஆனந்த சுரேஷ் முரட்டுக்காளை படத்தை அந்த சமயம் சில இடங்களில் வாங்கி விநியோகம் செய்தாராம். முதலிலே படத்தை நான் வாங்கவில்லை எனக்கு படத்தின் மீது நம்பிக்கை இல்லை என கூறினாராம். படம் முழுக்க முழுக்க கிராமத்து சார்ந்த கதையை வைத்து எடுக்கப்பட்டிருந்த காரணத்தால் சிட்டியில் இது எடுபடாது என இயக்குனரிடமும், தயாரிப்பாளரிடமும் கூறினாராம்.
இந்த திரைப்படம் திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் பெரிய ஹிட் ஆகும். ஆனால், நெய்வேலி பகுதியில் ஹிட் ஆக வாய்ப்பில்லை என கூறிவிட்டாராம். இருப்பினும் படத்தின் தயாரிப்பாளர்கள் நம்பி வாங்குங்க ஹிட் ஆகும் என நம்பிக்கை கொடுத்தார்களாம். ஆனால், போட்ட பணம் மட்டும் தான் கிடைத்ததாம். லாபம் கிடைக்கும் என காத்திருந்த ஆனந்த சுரேஷ்க்கு கடைசியில் ஏமாற்றம் தான் கிடைத்ததாம்.
பிறகு முரட்டுக்காளை படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த சுரேஷிடம் எவ்வளவு லாபம் கிடைத்தது என கேட்டாராம். அதற்கு ஆனந்த சுரேஷ் சரியான லாபம் கிடைக்கவில்லை படத்திற்காக நாங்கள் கொடுத்து வாங்கிய தொகை மட்டும் தான் கிடைத்திருக்கிறது என வேதனையில் கூறினாராம். இதனால் முரட்டுக்காளை படத்தின் தயாரிப்பாளரும் என்ன இப்படி சொல்றீங்க? என அதிர்ச்சியாகிவிட்டாராம். இந்த தகவலை ஆனந்த சுரேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆனால், முரட்டுக்காளை திரைப்படம் ஆனந்த சுரேஷ் வாங்கிய இடத்தில் மட்டும் தான் சரியாக போகவில்லை மற்றபடி தமிழகத்தில் படம் அந்த சமயமே மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு தான் ரஜினிகாந்திற்கு இன்னுமே பட வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எது என்னவோ!! இன்றைக்கும் ‘அண்ணனுக்கு ஜே…’ காளையனுக்கு ஜே’ போட்டுகொண்டிருக்கிறார்கள், ‘முரட்டுக்காளை’யின் ரசிகர்கள்…